அகமும் புறமும்.. பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

ஷார்ஜாவில் 26.04.2013, வெள்ளிக் கிழமை அன்று மாலை 04.30க்கு அகமும் புறமும் என்ற தலைப்பில் பெண்களுக்கான சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஆண்-பெண் புரிதல் குறித்த அறிவியல், உளவியல் மற்றும் இஸ்லாமிய பார்வை, மனித வாழ்வின் மகத்துவத்தை உணருதல், வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக வாழும் முறைகள் குறித்த பயிற்சிகளை பெண் பொறியாளர் ஷாமிலா அவர்கள் பயிற்சி அளிக்கிறார்.

ஷார்ஜா மண்டல தமுமுக சார்பாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்கள் 055-2353399,050-3851929,050-8669186 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.