பள்ளிவாசல்களுக்கு நடந்து செல்வதின் சிறப்பு

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''பள்ளிவாசலில் காலையில் அல்லது மாலையில் ஒருவர் இருந்தால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் காலையிலும், மாலையிலும் வரவேற்பை ஏற்பாடு செய்வான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1053)

 

அபூமூஸா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''மக்களில் கூலி அதிகம் பெறுபவர், தொழுகைக்காக வெகுதூரம் நடந்து வருபவர்தான். இன்னும் அவர்களில் அதிக தூரம் நடந்து வருபவர் தான், தொழுகையை இமாமுடன் தொழுவதற்காக எதிர்பார்த்திருப்பவர், தனித்து தொழுது விட்டு, பின்னர் தூங்கி விடுபவரை விட கூலி அதிகம் பெறுபவராவார் என்று நபி(ஸல்)கூறினார்கள்.   (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1057)

 

புரைதா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''பள்ளிவாசல்களுக்கு இருளில் நடந்து செல்பவர்களுக்கு, மறுமை நாளில் முழுமையான ஒளி உண்டு என சுபச் செய்தி கூறுங்கள்  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1058)

 

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒன்றின் மூலம் குற்றங்களை அல்லாஹ் அழித்து விடுவான். பதவிகளை அதன் மூலம் உயர்த்துவான். அதை உங்களுக்கு நான் அறிவிக்கலாமா?'' என்று தோழர்களிடம் நபி(ஸல்) கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சரி'' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். ''உளுவை சிரமமான காலங்களிலும் முழுமையாகச் செய்வது, பள்ளிவாசல்கள் பக்கம் அதிகம் நடந்து செல்வது, தொழுகைக்குப்பின் மறு தொழுகையை எதிர்பார்ப்பது. இவைதான் பாதுகாப்பானது. இவைதான் பாதுகாப்பானது என்று   நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1059)

 

அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''பள்ளிவாசல்களுடன் அதிக தொடர்புடையவராக ஒருவரை நீங்கள் கண்டால் அவருக்கு ''இறை நம்பிக்கை உண்டு'' என சாட்சி கூறுங்கள். ''அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்ய வேண்டியவன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகையைப் பேணி ஜகாத்  கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர எவரையும் பயப்படாத அவர்கள் தான். இவர்களே நேர்வழி பெற்றவர்களில் உள்ளவர்களாவர் என்று அல்லாஹ் (அல்குர்ஆன் 9:18 ல்) கூறி உள்ளான். என நபி(ஸல்) கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1060)

 

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்;கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

 

''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

 

Courtesy : Asghar Hussain (Al Zain Star Cargo LLC)