முதற் கலீபாவின் பத்துக் கட்டளைகள்

படை வீரர்களுக்கு பத்துக் கட்டளைகள்:

இஸ்லாமிய ஆட்சியின் முதற்கலீபா ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் இஸ்லாமியப்படை வீரர்களை போர்க் களத்திற்கு வழி அனுப்புவதற்கு முன்னால் அவ்வீரப் பெருமக்களை ஒன்று கூட்டி பின்வருமாறு உபதேசிப்பார்கள்.

1. தளபதிக்கு அடிபணியுங்கள்.
2. நீதிநெறியிலிருந்து பிறழாதீர்கள்.
3. பிறரை ஏமாற்றாதீர்கள், கொடுத்த வாக்கை மீறாதீர்கள்.
4. பெண்கள், வயோதிகர், குழந்தைகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள், சித்திரவதை செய்யாதீர்கள்.
5. பயன்தரும் பழமரங்களை வெட்டாதீர்கள், அவற்றை எரிக்காதீர்கள், விளைநிலங்களைப் பாழ்படுத்தாதீர்கள்.
6. ஆடு, மாடு, ஒட்டகைகள் முதலான கால்நடைகளை உணவுக்கன்றி வேறு எந்த நோக்கோடும் கொல்லாதீர்கள்,   வதைக்காதீர்கள்.
7. லஞ்சம் வாங்கி உங்கள் கரங்களையும், சமுதாயத்தையும் கறைபடுத்தாதீர்கள்.
8. கோழைத்தனத்திற்கும், தோல்விமனப்பான்மைக்கும் என்றும் இரையாகாதீர்கள்.
9. 'பிஸ்மில்லாஹ்' கூறி உங்கள் உணவுகளை உட்கொள்ளுங்கள்.
10. மக்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அன்பாலும் மென்மையான மொழிகளாலும் அழையுங்கள். காபிர்கள் மீது கருணைக் காட்டுங்கள்.இவ்வாறு நெறிபோதனை அளித்துதான் இஸ்லாமியப் படைவீரர்களை களத்திற்கு அனுப்பி வைத்தார்கள் கலீபா அவர்கள்.

Courtesy : Al Baqavi