மன்னர் அப்துல்லாவின் ஒரு அழகிய வேண்டுகோள்!

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் உலக இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது தற்போதய நவீன உலகின்

 பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் போது அதற்கு அடிப்படையாக குர்ஆனும் நபி மொழிகளும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் வேல்ட் லீக் மற்றும் இஸ்லாமிய சட்ட கவுன்சிலும் இணைந்து நடத்திய விழாவில் மேற் கண்டவாறு மன்னர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு ஏற்படும் நவீன பிரச்னைகளுக்கு ஒரு தீர்வை எட்டும்போது அது இஸ்லாமிய அடிப்படையை தகர்க்காமல் [ மீறாமல் , முரண்படாமல் ] இருக்க வேண்டும். இஸ்லாமிய தத்துவமானது எந்த காலத்துக்கும் எந்த நாட்டுக்கும், எந்த மொழி பேசுபவருக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். இதற்கு காரணம் இந்த மார்க்கமானது இறைவன் புறத்திலிருந்து வந்ததாலேயே ஆகும்.

சமீபத்திய அரசியல் கலாசார மாற்றங்கள் நமது வாலிப ஆண்களையும் பெண்களையும் தடம் புரளச் செய்யாது கண்காணிக்க வேண்டும். இன்று முஸ்லிமகள் சந்திக்கும் பிரச்னைகளில் தலையாயது சொந்த சகோதரர்களே ஒருவரை ஒருவர் மோதிக் கொள்ளும் சூழ்நிலைதான். இது மிகவும் வருத்தப்பட வேண்டிய நிகழ்வு. பிரிவுகளாகவும் இயக்கங்களாகவும் பிரிந்த ஒரு சில நபர்களின் தவறான வழி காட்டுதலால் இன்று முஸ்லிமகளுக்குள்ளேயே மோதிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கொரு தீர்வு கண்டு ஒன்றுபட்ட இஸ்லாமிய சமூகம் உருவாக முயற்சிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு மன்னர் அப்துல்லாவின் செய்தி உலக இஸ்லாமிய அறிஞர்களுக்காக மெக்கா கவர்னர் காலித் அல் ஃபெய்சலால் வாசித்தளிக்கப்பட்டது.

தகவல் உதவி அரப் நியூஸ் & Islamiya Kolgai
09-12-2012